படப்பிடிப்புக்கு இடையில் பைக் சுற்றுப்பயணம் செய்யும் அஜித்

சென்னை: படப்பிடிப்பு இடையில் சுற்றுப்பயணம்... அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏகே 61 படத்தில் நடித்து வருகின்றார். இந்த படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

அடுத்த கட்ட படப்பிடிப்பை வெளிநாட்டில் நடத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகளுக்கு இடையே அஜித் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். சில வாரங்களுக்கு முன் சென்னையில் இருந்து விமானம் மூலமாக லடாக் சென்று அங்கிருந்து இமயமலை பகுதிகளில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து வருகின்றார்.


இயற்கை காட்சிகளை ரசித்தபடி செல்லும் அவரது பைக் சாகச பயண புகைப்படங்கள் அவ்வபோது வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.

இந்த பயணத்தில் அஜித்துடன் நடிகை மஞ்சு வாரியரும் இணைந்து இருக்கின்றார் பயணத்தில் தன்னையும் சேர்த்துக் கொண்டதற்காக அஜித்திற்கு அவர் நன்றி தெரிவித்து வலைதளத்தில் பதிவும் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த பயணத்தின் போது அஜித் கார்கில் போர் நினைவிடத்திற்கு சென்று சல்யூட் அடித்து மரியாதை செய்துள்ளார். மேலும் அங்கு ராணுவ வீரர்கள் அஜித்துடன் என்று புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் அஜித் தற்போது பக்தர் கோவிலுக்கு சென்று வழிபட்டு இருக்கிறார் அப்போது புத்த விவகாரத்தை அஜித் சுற்றி வந்து வழிபடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.