வலிமை படத்தில் சென்டிமெண்ட் காட்சிகள் வைக்க அஜீத் பரிந்துரை!

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் ஒரு மசாலா திரைப்படம் என்றாலும் அந்த படத்தில் இடம்பெற்ற சென்டிமென்ட் காட்சிகள் பெரும்பாலானோரை கவர்ந்தது. குறிப்பாக பெண்களை அதிகம் கவர்ந்தது. இதனால்தான் அந்த படத்தை குடும்பம் குடும்பமாக திரையரங்குகளில் வந்து பார்வையாளர்கள் பார்த்தனர் என்பதும் அந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு சென்டிமெண்ட் காட்சிகள் முக்கிய காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நடித்து அஜித் நடித்து வரும் 'வலிமை' திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் திரைப்படம் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்த படத்திலும் சில சென்டிமெண்ட் காட்சிகள் குறிப்பாக பெண்களை கவரும் வகையிலான காட்சிகள் இருக்க வேண்டும் என்று இயக்குனர் ஹெச்.வினோத்துக்கு அஜீத் பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.

எனவே, அதன் அடிப்படையில் தற்போது கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. விஸ்வாசம் படத்தின் வெற்றி காரணமாக தனது அடுத்த படத்திலும் சென்டிமென்ட் காட்சிகளை வைத்து, பெண்களின் வரவேற்ப்பை பெற அஜித் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

யுவன் சங்கர் ராஜா இசையில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் 'வலிமை' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹூமா குரோஷி நடிக்கிறார். இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திக்கேயா வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.