நடிகர் விமல் நடித்துள்ள துடிக்கும் கரங்கள் படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிப்பு

சென்னை: விமல் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'துடிக்கும் கரங்கள்'. இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பசங்க, களவாணி, மஞ்சப்பை, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களில் நடித்து பிரபலமடைந்த விமல், சமீபத்தில் நடித்திருந்த விலங்கு வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது. விமல் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'துடிக்கும் கரங்கள்'. இப்படத்தில் மிஷா நரங் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தை வேலுதாஸ் இயக்க, ஒடியன் டாக்கீஸ் சார்பில் கே.அண்ணாதுரை, வேலுதாஸ் மற்றும் காளிதாஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்நிலையில் துடிக்கும் கரங்கள் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 25ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.