திடீரென தலைகுப்புற கீழே விழுந்த அறந்தாங்கி நிஷா!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் நேற்று தொடங்கப்பட்டது. நேற்றைய முதல் நாளில் போட்டியாளர்கள் அனைவரும் அறிமுகம் செய்யப்பட்டனர். இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு மணி நேர நிகழ்ச்சியை விட அந்த நிகழ்ச்சியின் 10 வினாடி புரோமோ விடியோ பெரும் எதிர்ப்பார்ப்பையும் பரபரப்பை ஏற்படுத்தும்.

அந்த வகையில் இன்றைய முதல் புரமோவில் வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டமும், இரண்டாவது புரமோவில் ஷிவானியை கார்னர் செய்யும் போட்டியாளர்களும் குறித்த காட்சிகள் இன்றைய நிகழ்ச்சியை பார்க்க வைக்கும் வகையில் தூண்டியுள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான மூன்றாவது புரமோவில் போட்டியாளர்கள் அனைவரும் கலர் விளையாட்டு விளையாடுகின்றனர். இந்த விளையாட்டில் ஒருவரை ஒருவர் ஓடிப்பிடித்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட போது திடீரென அறந்தாங்கி நிஷா தலைகுப்புற கீழே விழுகிறார்

முதல் நாளிலேயே கீழே விழுந்த அவர் மிகவும் சோர்வுடன் காணப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கீழே விழுந்தாலும் அவர் சிரித்தபடியே இருப்பதால் அவருக்கு பெரிதாக காயம் எதுவும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவருக்கு என்ன ஆச்சு என்பதை இன்று இரவு வரை பொறுத்திருந்து பார்ப்போம்