வந்துட்டாருய்யா... வந்திட்டாரு... முத்துவேல் பாண்டியன் வந்துட்டாரு!!!

சென்னை: ஜெயிலர் படக்குழு அறிவித்தபடி பட அப்டேட்டை, முத்துவேல் பாண்டியன் வருகை என குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த கெட்டப் பேட்ட கெட்டப் போல் உள்ளது என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ரஜினி – நெல்சன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ஜெயிலர். ரஜினி நடித்த எந்திரன், பேட்ட, தர்பார், அண்ணாத்த போன்ற படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு, ரோபோ சங்கர் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நடிகர் ரஜினியின் பிறந்தநாளை ஒட்டி ஜெயிலர் படக்குழு அப்படத்தின் சிறப்பு கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது. முத்துவேல் பாண்டியனாக நடித்துள்ள ரஜினியின் மாஸான காட்சிகளும், அனிருத்தின் தெறிக்கவிடும் பின்னணி இசை உடன் கூடிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் ஜெயிலர் படக்குழு அறிவித்தபடி ஜெயிலர் பட அப்டேட்டை, Muthuvel Pandian Arrives என குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ரஜினிகாந்த் மிகவும் கூலாக கருப்பு கண்ணாடியில், கையில் கத்தியுடன் மாஸாக இருக்கிறார். மேலும் ரஜினிகாந்த் லுக் பார்த்தால் அவர் ஏற்கனவே நடித்த பேட்ட படத்தில் இருப்பது போன்று இருக்கிறது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். பேட்ட கதை போல்தான் இதுவுமா என்று கேள்வியும் எழுப்புகின்றனர்.