காலமான சித்ரா கதாநாயகியாக நடித்துள்ள கால்ஸ் படம் ஜனவரியில் ரிலீஸ்

சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகை சித்ரா கதாநாயகியாக நடித்துள்ள கால்ஸ் திரைப்படம் ஜனவரி மாதம் இறுதியில் வெளியாகிறது.

இன்பினிட்டி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்த தயாரித்துள்ள திரைப்படம் 'கால்ஸ்.' இந்த படத்தில் சின்னத்திரை பிரபலம் சித்ரா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

இவருடன் , டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன், தேவதர்ஷினி, வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமீம் அன்சாரியின் இசையமைப்பில் இயக்குநர் ஜெ.சபரிஸ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

படம் பற்றிப் பேசிய இயக்குநர் இயக்குநர் ஜெ.சபரிஸ், 'தஞ்சாவூர், திருச்சி, சென்னை, வாரணாசி என பல இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2020 ஜனவரி மாத இறுதியிலேயே நிறைவடைந்தது. மேலும் இறுதிக்கட்ட பணிகளை முழு வீச்சில் தொடர்ந்து நடத்தி, 2020 ஜூலை மாதம் படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருந்தோம்.

அப்போது திடீரென்று ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் மாதம் நிறுத்தி வைக்கப்பட்ட இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள், லாக் டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் இந்த செப்டம்பர் மாதம் மீண்டும் வேகமாக தொடங்கியது.

தற்போது வரும் டிசம்பர் 15-ம் தேதியன்று படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட இருக்கிறோம். இதைத் தொடர்ந்து 2021 ஜனவரி 1-ம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று படத்தின் டிரெயிலர் வெளியிடப்படவுள்ளது. ஜனவரி மாத இறுதியில் திரைப்படத்தையும் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தோம்.

ஆனால், அதற்குள் எதிர்பாராதவிதமாக படத்தின் கதாநாயகியான சித்ரா காலமானார். அவரின் கனவு வெள்ளித்திரையில் தன்னைக் காண வேண்டும் என்பதுதான். அதற்குள் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்தது படக் குழுவினர் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும், அவருடைய விருப்பத்தின் அடிப்படையில் ஏற்கனவே திட்டமிட்டபடி இப்படத்தை 2021 ஜனவரி மாத இறுதியில் வெளியிட முடிவு செய்துள்ளோம்.' என்றார்.