நட்சத்திர தம்பதிகள் நடித்துள்ள டன்கின் டோனட்ஸ் விளம்பரம்

அமெரிக்கா: ஹாலிவுட் நடிகர் பென் மற்றும் அவரது மனைவி ஆகியோர் டன்கின் டோனட்ஸ் விளம்பரத்தில் நடித்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட Coffee Shop-களை நடத்திவரும் டன்கின் டோனட்ஸ் நிறுவனம், Super Bowl ரக்பி தொடரின்போது பிரத்யேகமாக ஒளிபரப்ப, ஹாலிவுட் நடிகர் Ben Affleck, அவரது மனைவியும், பாப் பாடகியுமான ஜெனிபர் லோபஸையும் வைத்து விளம்பரம் தயாரித்துள்ளது.

அதில், டன்கின் டோனட்ஸ் கடையில் Ben Affleck பணியாற்றுவது போலவும், அவரை அடையாளம் கண்ட சிலர் செல்பி எடுத்துசெல்வது போலவும் விளம்பரம் நகர்கிறது.

இறுதியாக, கடைக்கு வரும் ஜெனிபர் லோபஸ், கணவர் டோனட் கடையில் பணியாற்றுவதை பார்த்து அதிர்ச்சி அடைவதுபோல் விளம்பரம் நிறைவடைகிறது.