ராணா டகுபதியின் சிறுவயது புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம்

ஐதராபாத்: ராணா டகுபதியின் மனைவி தனது கணவரின் சில புகைப்படங்களை ஷேர் செய்ய அதில் அவரது சிறுவயது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

பிரபலங்கள் ஒரு படத்திற்காக என்ன லுக் போட்டாலும் நாம் கண்டுபிடித்துவிடுகிறோம், ஆனால் ஒரு சிலரது போட்டோவை கண்டே பிடிக்கமுடியாது. அதேபோல் தான் பிரபலங்களின் சிறுவயது புகைப்படமும்.

சிலரது முகம் சிறுவயதில் இருந்தே அப்படியே இருக்கும், ஒருசிலர் வளர்ந்த பிறகு அப்படியே மாறியிருப்பார்கள்.

அப்படி தான் இங்கு ஒரு பிரபலத்தின் சிறுவயது புகைப்படத்தை கண்டு அட இவர்தானா இது என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

பிரபல நடிகரான ராணா டகுபதியின் பிறந்தநாள் வாழ்த்து கூற அவரது மனைவி தனது கணவரின் சில புகைப்படங்களை ஷேர் செய்ய அதில் நடிகரின் சிறுவயது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

அதைப்பார்த்த ரசிகர்கள் அட நடிகர் ராணாவா இது செம கியூட்டாக இருக்கிறாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.