பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியில் தனலட்சுமி வருகிறாரா

சென்னை: விஜய் தொலைக்காட்சியின் முக்கிய நிகழ்ச்சியாக இருப்பது பிக்பாஸ் தான். எந்த நிகழ்ச்சிக்கும் இல்லாத TRP இந்நிகழ்ச்சிக்கு கிடைத்து வருகிறது. இதில் வைல்ட் கார்டு என்ட்ரியில் தனலட்சுமி மீண்டும் வருவார் என்று கூறப்படுகிறது.

அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட பிக்பாஸ் 6 ஜனவரி 2023ல் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது. தற்போது பிக்பாஸ் 6 வீட்டில் போட்டியாளர்களின் உறவினர்கள் வருமை தந்தனர், மிகவும் எமோஷ்னல் ஆன எபிசோடாக இருந்தது.

பிக்பாஸில் வைல்ட் கார்டு என்ட்ரீயாக மைனா நிகழ்ச்சி ஆரம்பித்த அடுத்த வாரத்திலேயே வந்துவிட்டார். இப்போது அடுத்த என்ட்ரீ குறித்து தகவல் வந்துள்ளது. அதாவது தனலட்சுமி மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரீயாக உள்ளே வர இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் மீண்டும் நிகழ்ச்சிக்குள் வர அவர் அதிக சம்பளம் கேட்பதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் தனலட்சுமி மீது ரசிகர்களுக்கு கடும் வெறுப்பு ஏற்பட்டுள்ளதால் அவரை அனுப்பாமல் வேறு யாரையாவது அனுப்பலாம் என்ற முடிவிலும் நிர்வாகம் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.