சென்னை: முதல்வர் பாத்திரத்தில் ஜீவா... ஆந்திர பிரதேசத்தின் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மஹி ராகவ் இயக்கத்தில் முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஆர் பையோபிக் திரைப்படமாக வெளியான ‘யாத்ரா’ படத்தின் இரண்டாம் பாகத்தில் ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தின் முதல் பாகமான ‘யாத்ரா’ திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டில் வெளியானது. இந்தப் படத்தில், முன்னாள் முதலமைச்சர் ’ஒய்.எஸ்.ஆர்’ கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்திருந்தார்.
தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான ‘யாத்ரா -2’ உருவாகவுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்குமெனத் தெரிகிறது. இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமென டோலிவுட் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.