கங்குவா படத்தின் க்ளிப் வீடியோவை சூர்யா பிறந்தநாளில் வெளியிட முடிவு

சென்னை: கங்குவா படத்தின் க்ளிப் வீடியோவை சூர்யாவின் பிறந்தநாளான 23ஆம் தேதி வெளியிடப் போவதாக படக்குழுவினர் போஸ்டரைப் பகிர்ந்துள்ளனர்.

நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் “கங்குவா” படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகைகள் திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படம் 3டியில் வரலாற்றுப் படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் ‘கங்குவா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

படத்தின் க்ளிப் வீடியோவை சூர்யாவின் பிறந்தநாளான 23ஆம் தேதி வெளியிடப் போவதாக படக்குழுவினர் போஸ்டரைப் பகிர்ந்துள்ளனர். இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.