ஜேம்ஸ்பாண்ட் நடிகர் சீன் கானரி காலமானார்

ஜேம்ஸ்பாண்ட் நடிகர் காலமானார்...டாக்டர் நோவில் கலக்கிய முதல் ஜேம்ஸ் பாண்ட்டும் பழம்பெரும் ஹாலிவுட் நடிகருமான சீன் கானரி காலமானார். அவருக்கு வயது 90

ஜேம்ஸ்பாண்ட் சீரிஸ் படங்களில் முதன்முதலில் ஜேம்ஸ் பாண்டாக நடித்த சீன் கானரி காலமானார். டாக்டர் நோ, ஃபிரம் ரஷ்யா வித் லவ், கோல்ட் பிங்கர், தண்டர்பேர்டு, யூ ஒன்லி லைவ் டிவைஸ், டைமண்ட்ஸ் ஆர் பாரேவர் ஆகிய ஆறு ஜேம்ஸ் பாண்ட் படங்களில் இவர் நடித்துள்ளார்.

1988ஆம் வருடம் ‘The Untouchables’ படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார். ஆஸ்கர் விருதை தவிர தனது 50 வருட சினிமா வாழ்க்கையில் பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.

சீன் கானரி யின் மறைவு குறித்து பதிவிட்ட நடிகர் அபிஷேக் பச்சன் “நாம் மற்றுமொரு ஆளுமையை இழந்துள்ளோம். ஹைலண்டர் படம் பார்த்ததுக்கு பிறகு அவர் எப்போதும் அழியாமல் இருப்பார் என்று நான் நம்பினேன். அவரது அற்புதமான பணிகளின் வழியாக அவர் நம்முடன் இருப்பார். உங்களை விட சிறந்த பாண்ட் இருக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.