நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ள எமர்ஜென்சி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மும்பை: ‘எமர்ஜென்சி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் நவம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
இந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். நடிப்பது மட்டுமின்றி திரைப்படங்களையும் இயக்கி வருகிறார். இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கங்கனா ரனாவத் இயக்கியுள்ள படம் ‘எமர்ஜென்சி’.

இந்திரா காந்தியின் எமர்ஜென்சி கால சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் நடிகை கங்கனா ரனாவத் இந்திரா காந்தியாக நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரித்தேஷ் ஷா திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் ‘எமர்ஜென்சி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் நவம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.