உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள படத்தின் புதிய அப்டேட்

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார்.

இதனை அடுத்து அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ' இந்த படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில், 'கண்ணை நம்பாதே' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. எனவே அதன்படி, இந்த படத்தின் முதல் பாடலான 'குருகுரு'பாடல் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.