வீராங்கனையாக இருந்து ஆபாச நடிகையாக மாறிய இளம்பெண் - அதிர்ச்சி தகவல்

முழு நேர கார் ரேஸ் வீராங்கனையாக இருந்த இளம்பெண் ஒருவர் ஆபாச நடிகையாக மாறியதற்கு இதுதான் காரணம் என்று அவரே பேட்டி அளித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த கார் ரேஸ் வீராங்கனை ரினி கிரேசி. 25 வயதான இவர் பல கார் ரேஸ் பந்தயங்களில் பங்கேற்று பரிசுகளை குவித்து உள்ளார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக எந்த கார் ரேஸ் போட்டியும் நடைபெறாததால் வருமானமின்றி ரினி கிரேசி இருந்துள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு ஆபாச படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. சம்பளமாக மிகப்பெரிய தொகையும் கிடைக்கும் என்பதால் இதனை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்த அவர் ஒரு சில ஆபாச படங்களில் நடித்துள்ளார்.

இதனை அடுத்து இந்த தொழிலில் தனக்கு அதிக பணம் கிடைத்து வருவதாகவும், தான் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்துள்ளதாகவும், இந்த தொழிலிலேயே சில ஆண்டுகள் நீடிக்க உள்ளதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆபாச பட திரை உலகிற்கு வந்த ஒருசில மாதங்களில் ஆறு இலக்க எண்கள் கொண்ட பணத்தை சம்பாதித்து விட்டதாகவும் இந்த பணம் தனக்கு மிகவும் உதவிகரமாக இருப்பதாகவும் இந்த தொழில் தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார்.