புஷ்பா 2 டீசர் எப்போது வெளியீடு ?

புஷ்பா படத்தின் 1 பாகம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், தற்போது 2-வது பாகம் விறு விறுப்பாக தயாராகி கொண்டு வருகிறது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா பஹத் பாசில், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

1 பாகத்தை விட புஷ்பா படத்தின் 2-வது பாகத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கான பணிகளில் படக்குழுவினர் மிக தீவிரமாக களமிறங்கி வேலை செய்து கொண்டு வருகிறார்கள். எனவே படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் அருமையாக எடுத்து கொண்டு வருகிறார்கள். படப்பிடிப்பு முடிந்த பிறகு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போது புஷ்பா-2 திரைப்படத்தின் 3 நிமிட அதிரடி டீசர் எப்போது வெளியாகும் என்ற தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புஷ்பாவின்3 நிமிட ஆக்‌ஷன் கட் டீஸர் அல்லு அர்ஜுன் பிறந்தநாளான ஏப்ரல் 8 -ம் தேதி தேதி வெளியாகிறது.

ஏற்கனவே, டீசர் கட் வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டதாகவும், பின்னணி இசை வேலைகள் தற்போது நடைபெற்று மும்மரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.விரைவில் டீசர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.