ஷாரூக்கின் ஜவான் படம் வெளியீடு தாமதமாகும் என்று தகவல்

சென்னை: . இந்த ஆண்டு ஜூன் மாதம் ஜவான் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜவான் வெளியீடு தாமதமாகும் என்றும் கூறப்படுகிறது.

ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான அட்லீ, அதன் பிறகு விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கினார். தற்போது ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார்.

நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். யோகி பாபுவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் அனிருத்.

பான் இந்தியா படமாக உருவாகி வரும் ‘ஜவான்’ படத்தில் நடிகர் விஜய் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் விஜய் தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் படத்தில் நடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.


இதனால் விஜய்க்கு நிகரான மாஸ் நடிகரை நடிக்க வைக்க அட்லீ தொடர்ந்து பல்வேறு நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும், இந்த வேடத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், ஜவான் படத்திற்காக ஷாருக்கான் அட்லீ மீது கோபமாக இருந்ததாக கூறப்படுகிறது, ஏனெனில் படத்திற்காக அவர் நினைத்ததை விட அதிகமாக செலவு செய்ததாக அறியப்படுகிறது.

இதனால் மிகவும் சோகத்தில் இருக்கும் அட்லீ சென்னைக்கு வந்து தனது வருத்தத்தை தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு ஜூன் மாதம் ஜவான் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜவான் வெளியீடு தாமதமாகும் என்றும் கூறப்படுகிறது.