சிம்புவின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு!

சிம்புவின் அடுத்த படத்தின் டைட்டில் நேற்று காலை 10 மணிக்கு வெளியானது. இந்த டைட்டிலை 10 இயக்குனர்களை இணைந்து அறிவித்தனர். பிரபல இயக்குனர்களான வெங்கட்பிரபு, ஆனந்த் சங்கர், விக்னேஷ் சிவன், விஜய்மில்டன், கார்த்திக் சுப்புராஜ், பா ரஞ்சித், சந்தோஷ் ஜெயகுமார், அஸ்வத், சாம் ஆண்டன், எம்.ராஜேஷ் ஆகிய 10 இயக்குனர்கள் இந்த படத்தின் டைட்டிலை அறிவித்துள்ளனர்.

சிம்புவின் அடுத்த படத்திற்கு 'பத்து தல'’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் இந்த படத்தை கிருஷ்ணா என்பவர் இயக்க உள்ளார் என்பதும் இவர் சூர்யாவின் 'சில்லுனு ஒரு காதல்' உள்பட ஒருசில படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னட திரையுலகில் மாபெரும் வெற்றிபெற்ற 'முப்தி' என்ற படத்தின் ரீமேக் படமான இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ளார். இவர் தயாரிக்கும் 20 வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த தகவல்கள் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.