சிம்புவின் அடுத்த படம் எது என்று நாளை அறிவிப்பா!!!

சென்னை: அடுத்த படம் குறித்து நாளை அறிவிப்பு? சிம்புவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என தகவல் கசிந்துள்ளதால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

சிம்பு நடித்த பத்து தல படம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிம்புவும் சூர்யாவும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சிம்பு நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படம் குறித்த தகவல்கள் சில நாட்களாக கசிந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்றும், இந்த படத்தின் பூஜையும் நாளை சென்னையில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இதையடுத்து சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கியவர் தேசிங்கு பெரியசாமி என்பது குறிப்பிடத்தக்கது.