கனெக்ட் படத்தின் டீசர் நயன்தாரா பிறந்தநாளில் வெளியாகிறதாம்

சென்னை: நடிகை நயன்தாராவின் கனெக்ட் படத்தின் டீசர் அவரது 38வது பிறந்தநாளை முன்னிட்டு வரும் 18ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் ‘கனெக்ட்’ படத்தில் நடித்துள்ளார் நடிகை நயன்தாரா. இப்படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த ஹாரர் த்ரில்லர் படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கடந்த ஆண்டு நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘கனெக்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இந்தப் படத்தின் டீசர் வெளியாகும் தேதியை புதிய போஸ்டருடன் படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி இந்த படத்தின் டீசர் நயன்தாராவின் 38வது பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 18ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.