நடிகை ரோஜாவின் மகள் புகைப்படம் இணையத்தை கலக்குகிறது

அப்படியே அம்மாவை போல் அழகு... தமிழ்த்திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகை ரோஜா. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ரோஜா தமிழ் திரையுலகில் நாயகியாக வாகை சூடியவர். இப்போது ஆந்திர அரசியலிலும் கலக்கி வரும் இவர், தற்போது எம்.எல்.ஏவாக உள்ளார்.

நடிகை ரோஜா 1992ம் ஆண்டு செம்பருத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர். சூரியன், உழைப்பாளி, அதிரடிப்படை என பல ஹிட் படங்களில் நடித்தவர்.

கார்த்திக்கோடு இவர் நடித்த உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படம் இன்றும் கிளாசிக்கல் ஹிட் வரிசையில் உள்ளது. இவர் இயக்குனரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்தார்.

இந்நிலையில் ரோஜாவின் மகள் அப்படியே அவரைப் போலவே இருக்கிறார். ரோஜாவைப் போலவே அவரும் திரையுலகில் பவனி வருவாரா என ஆவலோடு காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். அழகு தேவதையாக உள்ள ரோஜாவின் மகள் புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.