சென்னை: வாரிசு படத்தில் நடிகர் சிம்பு பாடியுள்ள தீ தளபதி பாடல் நேற்று வெளியானது.
பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவான இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து
யூடியூபில் 1 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.