இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் 5 பேர் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடிப்பு

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் 5 பேர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம்தோறும் திங்கள் கிழமைகளில் நாமினேஷன் நடைபெறுவது கடந்த மூன்று சீசன்கள் முதலே வழக்கமாக உள்ளது. அந்த வகையில் நேற்று பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் நடைபெற்றது. அதன்படி சுரேஷ் சக்கரவர்த்தி, ஆரி, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், ஆஜித் ஆகிய 5 பேர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்தனர்.

வீட்டில் குரூப்பிசம் உள்ளது என்பதை ஆரம்பத்தில் இருந்தே சுரேஷ் சக்கரவர்த்தி தெரிவித்து வந்தார். அந்த வகையில் தொடர்ந்து நாமினேஷனில் சுரேஷ் சக்கரவர்த்தி இடம் பிடித்து வருகிறார். ஆனால் அவருக்கு மக்களின் ஆதரவு அதிகளவில் உள்ளது.
மேலும் வீட்டில் உள்ள சக போட்டியாளர்கள் அவரை கொளுத்தி போடுகிறார் என்றும் பேசுகின்றனர். இருப்பினும் செம டப் கொடுக்கும் போட்டியாளராக சுரேஷ் இருந்து வருகிறார் என்பதுதான் உண்மையிலும் உண்மை.