மாநகரம் இந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்

ஒரு படம் போனது. அடுத்த படம் வந்தது... மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

'பாரஸ்ட் கம்ப்' என்ற ஹாலிவுட் திரைப்படம் ஹிந்தியில் 'லால் சிங் சட்டா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் ஹீரோவாக நடிக்கிறார். நடிகை கரீனா கபூர் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இப்படத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய கேரக்டருக்கு நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது கைவசத்தில் நிறைய படங்கள் இருப்பதால் தேதிகள் இல்லாமல் , அவர் இப்படத்தில் இருந்து விலகினார்.

இந்நிலையில் மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கவுள்ளார். இப்படத்தின் டைட்டில் நாளை ஜனவரி 1-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு வெளியாகவுள்ளது.

ஒரு இந்தி படம் கை நழுவி போனாலும் அடுத்த படம் வந்து சேர்ந்துள்ளது விஜய் சேதுபதிக்கு.