இந்த வாரம் டபுள் எவிக்சனில் வினுஷா, யுகேந்திரன் வெளியேறினர்

சென்னை: எதிர்பாராததை எதிர்பாருங்கள் என கமல்ஹாசன் சொன்னது போல் பிக்பாஸ்- 7ல் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்துள்ளது. அதன்படி வினுஷா, யுகேந்திரன் வெளியேறி உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

விஜய் டிவியின் ஹிட் நிகழ்ச்சி பிக்பாஸ் 7. கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி ஒரு மாதத்தை எட்டிவிட்டது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என 3 பேர் வெளியேறிவிட்டார்கள்.

இந்த வாரம் எதிர்ப்பாராததை எதிர்ப்பாருங்கள் என கமல்ஹாசன் சொன்னது போல் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்துள்ளது, இது ரசிகர்களுக்கு ஷாக் தகவலாகவே உள்ளது.

இந்த வாரம் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் வினுஷா மற்றும் யுகேந்திரன் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. யுகேந்திரன் ஒரு எபிசோடுக்கு ரூ. 27 ஆயிரம் சம்பளம் என இவருக்கு ரூ. 7 லட்சத்திற்கு மேலும், வினுஷா ஒரு எபிசோடுக்கு ரூ. 20 ஆயிரம் என ரூ. 5 லட்சத்திற்கு மேலாக சம்பளம் இருக்கும் என கருதப்படுகிறது.