கட்டா குஸ்தி படத்தின் வசூல் வேட்டையால் விஷ்ணு விஷால் மகிழ்ச்சி

சென்னை: மகிழ்ச்சியில் விஷ்ணு விஷால்... கட்டா குஸ்தி ரூ.30 கோடி வசூலை தாண்டும் என மகிழ்ச்சியில் திளைத்து இருக்கிறார் விஷ்ணு விஷால் என்று கோலிவுட்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

செல்ல அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள படம் கட்டா குஸ்தி படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படம் தமிழ்-தெலுங்கு இருமொழிகளில் உருவாகி உள்ளது. கட்டா குஸ்தி படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்று செம வசூல் வேட்டையாடி வருகிறது. இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் நடிகர் விஷ்ணு விஷால், “9 படங்கள் என்னை விட்டுப் போயும் நான் நம்பிக்கையுடன் இருந்தேன். இன்று என் கையில் 9 படங்கள் உள்ளன என்று கூறினார். இந்தப் படம் ‘எஃப்ஐஆர்’ வசூலை முறியடித்துள்ளது. கட்டா குஸ்தி படம் ரூ. 30 கோடி வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.