நிறைய லவ்வோடு சமைக்கிறோம்... அஜித்தின் அட்டகாச பதில்

சென்னை: நிறைய லவ்வோடு சமைக்கிறோம், அதனால் தான் அப்படி இருக்கு என அஜித் கூறியதாக ராஜ் ஐயப்பா தெரிவித்துள்ளார்.

அஜித் அவருடன் பணியாற்றுபவர்களுக்கு அவரது கையால் சமைத்து கொடுப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த பிரபலங்கள் அது பற்றி பேட்டிகளில் கூட அஜித் சமையல் பற்றி பேசுவதை கேட்டிருக்கிறோம்.

இந்நிலையில் வலிமை படத்தில் அஜித் உடன் நடித்து இருந்த ராஜ் ஐயப்பா தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவுக்கு வந்திருக்கிறார். அந்த ஷோவில் அவர் அஜித்தின் சமையல் பற்றி பேசி இருக்கிறார். அஜித் சார் சமைக்கும்போது உடன் இருந்து பார்த்திருக்கிறேன். அதை சாப்பிட்டுவிட்டு நன்றாக இருக்கிறது என சொன்னேன்.

நிறைய லவ்வோடு சமைக்கிறோம், அதனால் தான் அப்படி இருக்கு என அஜித் கூறியதாக ராஜ் ஐயப்பா கூறியுள்ளார்.