சூரரைப் போற்று திரைப்படத்தில் அப்துல் கலாம் கதாபாத்திரத்தில் நடித்தவர் யார்?

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவு அளித்துள்ளனர். விமர்சகர்களும் படத்தை பாராட்டி எழுதி வருகின்றனர்.

சூரரைப் போற்று படத்தில் இடம் பெற்ற அப்துல் கலாமின் காட்சி பார்ப்பதற்கே நெகிழ்ச்சியாக இருந்தது. அந்த படத்தில் அப்துல் கலாம் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் கலக்க போவது யாரு நவீன். அப்துல் கலாமாக நடித்தவர் உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்த ஷேக் மைதீன் என்பவர்.

முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல் கலாமின் தோற்றத்தை பெற்றிருந்த அவர், கலாமின் மீது கொண்ட பற்றின் காரணமாக சிகை அலங்காரம் மற்றும் தோற்றத்தை அப்படியே மாற்றி கொண்டார்.

இவர் உடுமலை கலாம் என்று மக்களால் அழைக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் சூரரைப் போற்று படத்தில் நடித்த அவர், படத்தை பார்ப்பதற்கு முன்பே இயற்கை எய்திவிட்டார்.