எக்ஸில் புது வசதியை அறிமுகம் செய்து அசத்திய எலான்

இந்தியா: கடந்த ஜூலை மாதம் பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரின் பெயர் மற்றும் லோகோவை எக்ஸ் என்று மாற்றம் செய்தார் எலான் மஸ்க். இதையடுத்து, பயனர்களுக்காக பல மாற்றங்களை செய்து கொண்டு வருகிறார். அந்தவகையில் இந்த எக்ஸை தகவல்களை தெரிந்து கொள்வதற்கும், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் பயன்படுத்தி வந்தனர்.

இப்போது மற்றவர்களுடன் பேச மெசேஜ் செய்யும் வசதிகள் இருக்கிறது. இதை இன்னும் மேம்படுத்தும் விதமாக, வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் இருப்பது போன்று, ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்து பேசும் வசதியை எக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்த வசதிகள் விரைவில் வரவுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்த நிலையில் தற்போது நடைமுறைக்கு வந்து உள்ளது.

இந்த அம்சம் தொடர்பாக வெளியான பதிவில் இருக்கும் படத்தில், பயனர்கள் ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்யலாம் என்பதை காட்டுகிறது. அதோடு அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதும் காட்டப்பட்டுள்ளது. எனினும் இந்த அம்சம் ஒரு சில பயனர்களுக்கு இன்னும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

எக்ஸ் சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும் அம்சங்களில் இந்த ஆடியோ மற்றும் வீடியோ கால் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.