குழந்தைகள் தின விழா பற்றி அறிந்து கொள்வோமா

இந்தியா: இந்தியாவில் இன்று முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாள் குழந்தைகள் தின விழா ..இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு அவர்கள் 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி அலகாபாத்தில் பிறந்தார்.

இதையடுத்து நாட்டுக்காக பல்வேறு சேவைகளை செய்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திலும் இவரது பங்கு இன்றியமையாததாகும். நாட்டில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் நலனில் அக்கறை கொண்டு பல நலத்திட்டங்களை உருவாக்கினார்.

அதனால் இவர் நவீன இந்தியாவின் சிற்பி என்றும் இவர் அழைக்கப்பட்டார். இவரது பிறந்த நாளை குழந்தைகள் தின விழாவாக கொண்டாட 1964ம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன்படி நவம்பர் 14ம் தேதி ஆண்டுதோறும் குழந்தைகள் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

குழந்தைகளின் கல்வி உரிமை போன்றவற்றின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்பதை இந்நாளில்மிக முக்கிய நோக்கமாக உள்ளது.