பயனர்களின் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கையாக வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அப்டேட் வெளியீடு

ஒரே நேரத்தில் பல வாட்ஸ்அப் Privacy அப்டேட்கள் .. .வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் அனுபவத்தை மேலும் சிறப்பாகும் வகையில் பல அப்டேட்களை வெளியிட்டபடியே இருந்து கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் IOS பயனர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் வகையில் பல அப்டேட்களை வெளியிட்டு உள்ளது.

அதாவது, வாட்ஸ்அப்பில் புதிதாக Privacy Checkup என்னும் வசதி வழங்கப்பட்டு உள்ளது. எனவே இதன் மூலமாக உங்களின் வாட்ஸ்அப் கணக்கிற்கு தேவையான பாதுகாப்பை நீங்கள் ஏற்படுத்தி கொள்ளலாம்.

வாட்ஸ்அப் மூலமாக எந்தெந்த பயனர்கள் உங்களை தொடர்புகொள்ள வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளலாம். மேலும், யார் யாருக்கு last seen, Status தெரிய வேண்டும் என்பதையும் முடிவு செய்யலாம்.

மேலும் இது போக, குறிப்பிட்ட நேரத்தில் உங்களது செய்தி பயனர்களுக்கு சென்றடையும் வகையில் Timer வசதியும் வழங்கப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட நபரின் சேட்டை உங்களால் Finger Print மூலமாக லாக் செய்து கொள்ள முடியும். இது போல பல பாதுகாப்பு அம்சங்களை வழங்கும்படியான அப்டேட்கள் கிடைத்து உள்ளன.