தேவதை போல் ஜொலிக்க வைக்கும் தலைமுடி அலங்கார பொருட்கள்!

மணப்பெண் அலங்காரம் என்றதுமே முதலில் வருவது தலைமுடி அலங்காரத்துக்கு தேவையானவைதான். பூக்கள் மட்டுமே அல்லாமல் மற்ற சில துணை பொருள்கள் கொண்டு உங்கள் கூந்தல் அலங்கரிக்கப்படும்போது உங்க அழகின் வேறொரு பரிமாணத்தை நீங்கள் அடைவீர்கள்.

ராக்கொடி
ராக்கொடி என்பது விசேஷ நாட்கள், பரதநாட்டிய நேரங்கள் மற்றும் மணமுடிக்கும் நேரங்களில் பெண்ணின் அழகை அதிகரிக்க பயன்படுகிறது. ஒளி வீசும் கற்கள் பதித்த வட்ட வடிவ தட்டு போல இருக்கும் ராக்கொடி முக்கிய நாட்களில் உங்கள் தலையை அலங்கரிக்கட்டும்.

பன் சங்கிலிகள்
மணப்பெண் அலங்காரத்தை சிம்பிளாக அதே சமயம் அற்புதமாக மாற்றி கொள்ள நினைப்பவர்கள் பன் சங்கிலிகளை வாங்கி விடுங்கள். பின்னர் உங்கள் அழகு கண்டு அனைவரும் பொறாமை கொள்வர்.

முடி கிளிப்புகள்
திருமண நாளன்று அல்லது வரவேற்பு நேரத்தில் மணப்பெண் ஒரே மாதிரியான அலங்காரம் செய்யாமல் கொஞ்சம் லகுவாக அலங்காரம் செய்து கொள்ள கிளிப்கள் பயன்படுகின்றன.

மலர் தொடுதல்
அழகான உங்கள் கூந்தலை அதிகம் சிரமப்படுத்தாமல் ஆங்காங்கே பூக்களால் ஆன ஹேர்பின்களை சொருகி கொண்டால் உங்கள் நாளில் தேவதை நீங்களே என எல்லோரும் சொல்வார்கள்.

பாரம்பரிய தொடுதல்
பாரம்பரியமான எளிமையான அலங்காரம் உங்களுக்கு பிடிக்கும் என்றால் நீங்கள் இந்த அணிகலனை அணியலாம். ஒரு எளிமையான கொண்டை போதுமானது. பூக்களின் தேவைகள் கூட அவசியம் இல்லை.

தலைப்பாகை
சமீபத்திய திருமணங்களில் மாலை நேர வரவேற்புகளில் இது போன்ற கற்கள் பதித்த டியராக்கள் கொண்டு அலங்கரிக்கப்படுகிறது. மாலை நேர வெளிச்சத்தில் உங்கள் tiara வில் பட்டுத் தெறிக்கும் விளக்கொளியில் ஜொலிப்பதை உங்கள் கணவர் காணலாம்.

மாத பட்டி
மாத பட்டி என்பது உங்கள் நெற்றியை அலங்கரிக்கும் ஒரு அணிகலன். திருமண நாளன்று உங்களை அலங்கரித்து கொள்ள இது சரியானதாக இருக்கும்.

சங்கிலியுடன் காது வளையங்கள்
காதோரம் லோலாக்கு என்பது ஆண்கள் உங்களை ரசிக்கும் ஒரு முக்கியமான இடம் மற்றும் அணிகலன் ஆகும். ஆகவே அதனை அழகானதாக அணிந்து கொண்டால் உங்கள் அழகு பூரணமாகும்.