பெண்களுக்கான 5 சிறந்த ஓய்வூதிய திட்டங்கள் பற்றி பார்க்கலாமா


ஓய்வூதிய திட்டங்கள்

இந்தியாவில் பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பெண்களின் ஓய்வுக்கு பின் அவர்களுக்கு ஏற்படும் நிதி தேவையை சமாளிக்க, ஓய்வூதிய திட்டங்களில் முதலீடு செய்வது மிக அவசியம் ஆகும்.

ULIP திட்டம் (Unit Linked Insurance Plan):

இத்திட்டமானது பெண்களுக்கு சிறந்த முதலீடு தேர்வாக இருக்கும், இதில் ஆயுள் காப்பீட்டுடன், முதலீட்டு வசதி இருக்கிறது. இந்த திட்டம் முதிர்விற்கு பின் வழக்கமான ஓய்வூதியத்தின் பலன் கிடைக்கும். இந்த யூலிப் திட்டங்களை எல்ஐசி உள்ளிட்ட பல காப்பீட்டு நிறுவனங்கள் இயக்கி கொண்டு வருகின்றன.

மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund):

இந்த திட்டம் மூலம் அதிகமான வருமானம் கிடைக்கும். மேலும் SIP இன் கீழ் மாதாந்திர பிரீமியம் கிடைக்கும். மேலும் SWP மூலம், குறிப்பிட்ட காலத்திற்கு ஓய்வூதியம் கிடைக்கும்.

அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension Yojana):

இத்திட்டம் வருமானம் அதிகமாக இல்லாதவர்களுக்கு சிறந்த திட்டமாக இருக்கும். எனவே இதன் மூலம் 18 வயது முதல் 10 வயது வரை இருப்பவர்கள் பயன் பெறலாம். மேலும் இத்திட்டத்தின் கீழ் 60 வயதை எட்டிய பின் ரூ1000 முதல் ரூ.5000 வரை ஓய்வூதியம் பெறலாம்.

தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension Scheme):

இந்த திட்டம் பெண்களுக்கான சிறந்த ஓய்வூதிய திட்டம் ஆகும். இதில் முதலீடு மற்றும் வயது அடிப்படையில் ஓய்வூதியம் கிடைக்கும். அதாவது 30 வயதில் ரூ.5000 முதிலீடு செய்தால், 60 வயதை முடித்த பின் ரூ45,000 ஓய்வூதியம் கிடைக்கும்.

எல்ஐசி ஜீவன் அக்ஷய் 7 ஓய்வூதியத் திட்டம் (LIC Jeevan Akshay 7 Pension Plan):

இத்திட்டத்தில் பாலிசியை 30 வயதில் வாங்கலாம். இதையடுத்து இதில் குறைந்தபட்ச கொள்முதல் விலை ரூ.1 லட்சம் ஆகும். அதே போல அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு எதுவும் கிடையாது.