Whatsapp பயனர்களுக்கு ஒரு அப்டேட்


இந்தியா: வாட்ஸ்ஆப்பில் மெட்டா AI குறுக்குவழியை சாட் டேப்பில் இருந்து மறைக்கும் புதிய வசதியை அறிமுகம் ...இந்தியாவில் அதிகமாக மக்கள் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வாட்ஸ்ஆப் நிறுவனம் பயனர்களின் வசதிக்காக பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து கொண்டு வருகிறது.

அந்த வகையில் தற்போதும் ஒரு புது அப்டேட் வந்து உள்ளது. அதாவது இந்த புதிய வசதி பயனர்களுக்கு ஷார்ட்கட்டை மறைத்து, அவர்களின் வழக்கமான பயன்பாட்டில் AI தொடர்புகளை ஒருங்கிணைக்க வேண்டுமா இல்லையா என்பதைத் தேர்வுசெய்ய அனுமதி வழங்குகிறது.

மேலும் இந்த வசதி தேவையற்ற கருத்துக்களை பார்க்காமல் தவிர்க்கும் வாய்ப்பை வழங்குகிறது. இவ்வசதி கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து ஆண்ட்ராய்டுக்கான சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டாவை நிறுவும் பீட்டா சோதனையாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து அடுத்த சில நாட்களில் இந்த புது அப்டேட் அனைத்துபயனர்களுக்கு வழங்கப்படும். அதன் பின்னர் அவர்களின் சேட் டேப் AI குறுக்குவழி தெரிய வேண்டுமா என்பதை கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.