வாட்ஸ்அப்பில் வரவுள்ள புதிய அம்சம்

இந்தியா : நாள்தோறும் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்யவுள்ளதாக தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே அதன்படி என்க்ரிப்ட் செய்யப்பட்ட வாட்ஸ் அப் சாட் – களுக்கான ரகசிய குறியீட்டை சேர்ப்பது மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது அரட்டைகளின் பெயரிலிருந்து தனிப்பட்ட சாட்களை மட்டும் மறைப்பதற்கு இந்த அம்சம் பயன்படுத்தப்படுகிறது. மற்றொரு சேனல் புதுப்பிப்புகளுக்கான அம்சமானது சேனல்களின் பார்வையாளர்களை கணக்கிடுவதற்கான புதிய அம்சமாகும்.

இதையடுத்து தேதி வாரியாக பயனர்கள் தங்களின் குறிப்பிட்ட செய்திகளை தேடுவதற்கான வசதிகள் வரவுள்ளது. வாட்ஸ் அப் பீட்டா செயலியில் சேனல் நிர்வாகிகள் தங்கள் சேனல்களுக்கான ஸ்டிக்கர்களை பகிர்ந்து கொள்ள முடியும்.

மேலும் இது போன்ற பல்வேறு அம்சங்களும் WhatsApp செயலியின் பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும், பாதுகாப்பை உறுதி செய்யவும், பயனர்களின் தனிப்பட்ட உரிமையை பாதுகாக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.