என்னது இனி வாட்ஸ்அப்பில் அன்லிமிடெட் கிடையாதாம்

செக் வைத்த கூகுள் ...மனிதர்களின் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக ஆண்ட்ராய்டு மொபைல் அமைந்து உள்ளது. அதிலும் சில செயலிகளை அதிக பயனர்கள் பயன்படுத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக உலக நாடுகளின் முழுவதும் வாட்ஸ் அப்பில் (whatsapp) பயன்படுத்துவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.

இதையடுத்து ஒருவருக்கொருவர் தங்களது தகவல்களை பரிமாற்றிக்கொள்ள இது மிகவும் பயன்பட்டு வருகிறது. வாட்ஸ் அப்பில் நொடி பொழுதில் ஆடியோக்கள், வீடியோக்கள் பரிமாற்றம் செய்யப்படுவதால் இச்செயலியை அனைவரும் பயன்படுத்தி கொண்டு வருகின்றனர்.

இதனால் வாட்ஸ் அப்பில் கடந்த சில மாதங்களாகவே சில மாற்றங்களை செய்து கொண்டு வருகின்றன. எனவே இதன் காரணமாக வாட்ஸ் அப் பேக்கப்களுக்கு வழங்கப்பட்டு வந்த அன்லிமிடெட் நிறுத்திக் கொள்ள கூகுள் செய்துள்ளது. இந்த நிலையில், இனிமேல் வாட்ஸ்அப் செயலியில் பேக்அப்பிற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அன்லிமிடெட் பேக்அப்களும் பதிலாக 15 ஜிபி வரை மட்டுமே பேக்அப் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் தனிப்பட்ட ஒவ்வொரு கூகுள் கணக்கிற்கும் 15 ஜிபி பேக்அப் இலவசமாகத் தரப்படும். அதன்மூலம் மெயில், போட்டோஸ், டிரைவ் என்று எதை வேண்டுமானாலும் பேக்அப்செய்து கொள்ளலாம். 15 ஜிபி லிமிட் முடியும் வரை பேக்அப் இலவசமாக செய்துகொள்ளலாம். அதற்கு மேல் பேக்அப் செய்ய வேண்டும் என்றால் நாம் மாதம் கட்டணம் செலுத்த வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக வாட்ஸ்அப் பேக்கப்களுக்கு அன்லிமிடெட் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு வந்தது