ஆதார் கார்டில் வீட்டில் இருந்தபடியே எப்படி மொபைல் எண்ணை அப்டேட் செய்வது குறித்து பார்ப்போம்

இந்தியா: எப்படி மொபைல் எண்ணை அப்டேட் செய்வது என்பது தொடர்பான முழு விவரமும் இதோ ....இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு மிக முக்கிய ஆவணமாக விளங்கி கொண்டு வருகிறது. இந்த ஆதார் கார்டுடன் மொபைல் எண்ணை இணைப்பது மிகவும் அவசியம். நீங்கள் மொபைல் எண்ணை மாற்றும் பட்சத்தில் பழைய மொபைல் எண்ணை ஆதார் கார்டி.லிருந்து நீக்கிவிட்டு புதிய மொபைல் எண்ணை இணைப்பது மிகவும் அவசியம். நீங்கள் வீட்டில் இருந்தபடியே எளிமையாக ஆதார் கார்டுடன் மொபைல் எண்ணை இணைக்க முடியும்.

அதாவது, UIDAI என்கிற இணையதள பக்கத்தின் மூலமாகவோ அல்லது இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் மூலமாக ஆதார் கார்டில் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்.இதையடுத்து இதற்கு முதலில், https://www.ippbonline.com என்கிற இணையதள பக்கத்திற்கு சென்று service request என்பதை தேர்வு செய்யவும்.


அதன் பின்னர், Doorstep Banking என்பதை கிளிக் செய்து ஆதார்-மொபைல் அப்டேட் என்பதில் டிக் செய்ய வேண்டும். பின்னர், அதில் உங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

பின்னர், உங்களது வீட்டிற்கே வந்து ஆதார் பயோமெட்ரிக்ஸ் பதிவு மற்றும் KYC செயல்முறையை நிறைவு செய்யப்படும். இதன் பின்னர், உங்களது ஆதார் எண்ணுடன் மொபைல் எண் இணைக்கப்பட்டு விடும்.