புதிதாக திருமணமானவர்களுக்கான ரேஷன் கார்டு பெறுவதற்கான வழிமுறைகள்

தமிழகத்தில் ரேஷன் கார்டு வாயிலாகவே அரசின் நலத்திட்டங்கள், பொங்கல் பரிசு உள்ளிட்ட பல்வேறு வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் இந்த ரேஷன் கார்டில் இருக்கும் விவரங்கள் சரியானதாக இடம்பெற்றிருக்க வேண்டும்.

இதில் குறிப்பாக புதிதாக திருமணமாகும் நபர்கள் தங்களுக்கான தனியாக ரேஷன் கார்டுகளை விண்ணப்பித்து பெற வேண்டியது அவசியமாகும். இதற்கு முதலில் பெற்றோர் வைத்திருக்கும் ரேஷன் கார்டில் தங்களின் பெயர்களை நீக்க வேண்டியது கட்டாயமாகும்.

இவ்வாறு தங்களின் பெயர்களை நீக்க திருமண சான்றிதழ், ஆதார் கார்டு போன்றவற்றின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க இருவருடைய ஆதார் கார்டு மற்றும் தனியாக வசித்து வருவதற்கு சான்றிதழாக சிலிண்டர் பில் மற்றும் வீட்டு வாடகை பத்திரம் அல்லது இருப்பிட ஆவணம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது பொது சேவை மையங்களுக்கு நேரில் சென்றோ விண்ணப்பிக்கலாம்.ஆனால் இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும்.

மேலும் இதைபோல, பிறந்த குழந்தைகளின் பெயர்களை சேர்ப்பதற்கு அந்த குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றை சமர்ப்பித்து தங்களின் ரேஷன் கார்டுடன் இணைத்துக் கொள்ளலாம்.