உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச கேஸ் சிலிண்டர்களை எவ்வாறு பெறுவது முழு விவரம் இதோ


இந்தியா: தமிழகத்தில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை எளியோருக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது எப்படி இலவச கேஸ் இணைப்புகளை பெறலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.

அதற்கு முதலில், அருகிலுள்ள LPG விற்பனை நிலையத்திற்கு சென்று இலவச கேஸ் சிலிண்டருக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும். 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் இந்த இலவச கேஸ் இணைப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கு விண்ணப்பிக்கும் போது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சேமிப்பு கணக்கு பாஸ்புக், வங்கி கணக்கு அறிக்கை, இருப்பிட சான்று, பிபிஎல் சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ போன்ற ஆவணங்களை எடுத்து செல்லவும்.

மேலும் இந்த முக்கிய ஆவணங்களுடன் விண்ணப்ப படிவத்தை இன்டேன், பாரத் கேஸ் அல்லது இந்துஸ்தான் பெட்ரோலியம் தனியார் நிறுவன கேஸ் விற்பனை நிலையத்தில் ஒப்படைத்தால் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.