அரசின் திட்டங்கள் குறித்து வாட்ஸ் அப் மூலம் எளிதாக அறியலாம்

இந்தியா: அரசின் திட்டங்களை அறிய உதவும் வாட்ஸ் அப் .... தமிழக அரசு சார்பாக பொதுமக்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் வழங்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டு வருகிறது. இத்திட்டங்கள் குறித்தும் அதன் பயன் குறித்தும் இன்னும் பல பேருக்கு தெரியவில்லை. அதனால் தகுதியுடைவர்கள் பயன் பெற முடியாமல் உள்ளனர். மேலும், திட்டங்களை அறிந்தாலும் அதன் மூலம் எவ்வாறு பயன் அடைவது என்பது பற்றிய விழிப்புணர்வு இல்லை.

இதை கருத்தில் கொண்டு மக்கள் மாநிலம் முழுவதும் உள்ள அரசின் திட்டங்களை whatsapp மூலம் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாட்ஸ் அப்பிற்கு “மக்கள் நலன் bot” என பெயரிடப்பட்டுள்ளது. இதனை மக்கள் தங்கள் கைகளில் உள்ள ஸ்மார்ட் போன் வாயிலாக தொடர்பு கொண்டு திட்டங்கள் பற்றி அறியலாம். அதற்கான வழிமுறைகளை இதோ

“மக்கள் நலன் bot” திட்டத்தின் 99445879944 என்ற வாட்ஸ்அப் எண்ணை முதலில் மொபைல் போனில் பதிவு செய்து வைத்துக் கொள்ளவும். பிறகு வாட்ஸ்அப் ஓப்பன் செய்து Hi என மெசேஜ் அனுப்பவும்.

அடுத்தாக உங்களது மொழி, பாலினம், சமூகம், மதம், வகை, ஆண்டு வருமானம் ஆகியவற்றைத் தேர்வு செய்யவும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் வகையை பொறுத்து அதிலுள்ள திட்டங்கள் உங்களுக்கு திரையில் காண்பிக்கப்படும்