சர்க்கரை நோயாளிகள் உலர் பழங்களை சாப்பிடலாமா!!! கூடாதா?

சென்னை: உலர் பழங்கள், பிரஷ்ட் பழங்கள் என எந்த வகையிலும் பழங்களைச் சாப்பிடுவது நல்லது என்று முன்னோர்கள் கூறினாலும், சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா என்ற சந்தேகம் உள்ளது.

இந்நிலையில், பழங்களை விட உலர் பழங்களில் அதிக சர்க்கரை இருப்பதாகவும், உலர் பழங்களில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை இருப்பதால், உடலில் சர்க்கரை அளவை குறைக்க விரும்புபவர்கள் உலர் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

உலர் பழங்களை விட பிரஷ் பழங்களில் சத்து அதிகம் என்றும், அனைத்து சத்துக்களும் இயற்கையாகவும், செயற்கையாக இல்லாததால், அந்த பழங்களில் சத்துக்கள் காணப்படுவதாகவும், உலர் பழங்களில் தண்ணீர் சத்து குறைவாக இருப்பதால் சத்து குறைவாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே நீரிழிவு அல்லது சாதாரணமானவையாக இருந்தாலும் உலர் பழங்களை விட பிரஷ் பழங்கள் சாப்பிடுவது நல்லது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.