உடல் நலனை ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள சில வழிகள்

சென்னை: காலை உணவுடன் பச்சை வேர்க்கடலை சிறிது, வெங்காயம் சிறிது சேர்த்து கொள்ள சருமம் பளபளப்பாக நோய் தொற்று இன்றி இருக்கும்.

இரவு உணவுடன் பேரீச்சம் பழம் எடுத்துக் கொள்ள எலும்பு உறுதிப்படும். சீரகத் தண்ணீரை அருந்தி வர உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி ஆரோக்கியம் மேம்படும். மதிய உணவை கீரை, முளைகட்டிய பயறு,மோர், வெள்ளரி அல்லது கேரட் சாலட் போன்ற சரிவிகித உணவாக சாப்பிட நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

இரவு ஒரு டம்ளர் பாலுடன் மஞ்சள் தூள் அல்லது குங்குமப்பூ அல்லது பாதாம் பவுடர் கலந்து குடித்து வர வளரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பாற்றல் அதிகரித்து வளர்ச்சி சீராக இருக்கும். பன்னீரில் தேன் கலந்து தடவி வர எளிமையான மாஸ்க் காக முக பொலிவைத் தரும்.

பாசிப்பயறு மாவுடன் எலுமிச்சாற்றை கலந்து முகத்தில் பூசி வைத்திருந்து சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பருக்கள் மறையும். சோம்பினை அரைத்து பருக்களின் மேல் பூசிட பருக்கள் மறைந்து, முகம் அழகு பெறும்.

முருங்கைக்கீரை சாற்றுடன் எலுமிச்சை பழச்சாற்றை சமமாக கலந்து முகத்தில் பூசி வைத்திருந்து பின்னர் கழுவ முகத்தில் உள்ள கருமை கரும்புள்ளிகள், பருக்கள் மறையும்.