சைவ பிரியர்கள் புரத சத்தை பெற உணவில் எவற்றை சேர்த்து கொள்ளலாம்?

மனித உடலுக்கு தேவையான சத்துக்களுள் ஒன்று புரத சத்து. பொதுவாக அசைவ உணவுகளில் அதிகளவு புரத சத்து காணப்படும். அதே நேரத்தில் சைவ பிரியர்கள் புரத சத்தை பெற உணவில் எவற்றை சேர்த்து கொள்வது என்பது குறித்து பார்க்கலாம்.

தயிர்
தயிர் உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு புரதம் நிறைந்திருக்கிறது. 100 கிராம் தயிரில் 10 கிராம் புரதம் இருக்கிறது. இது குடல் மற்றும் வயிற்று பகுதிகளுக்கு ஆரோக்கியமாக இருக்கும். மேலும் செரிமானத்தை சீராக்கி உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தயிரில் வெள்ளரி, சீரகம் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்து சாப்பிடலாம். மேலும் இதில் ஆளிவிதைகளையும் சேர்த்து சாப்பிடலாம்.

ப்ரோட்டீன் ஷேக்
பழங்களை கொண்டு ப்ரோட்டீன் ஷேக் தயாரித்து குடிக்கலாம். உதாரணமாக பெர்ரீஸ், மாம்பழம் போன்றவற்றில் ஷேக் செய்து குடிக்கலாம். தசைகளை வலுவாக்கும் தன்மை இதற்கு உண்டு.

சீஸ்
உடல் எடை குறைக்க சீஸ் சாப்பிடலாம். காட்டேஜ் சீஸில் புரதம் நிறைந்துள்ளது என்பதால் சைவ பிரியர்கள் சீஸை அதிகம் உணவில் சேர்த்து கொள்ளலாம். பச்சை காய்கறிகள், சிட்ரஸ் பழங்கள் மற்றும் விதைகளுடன் சாப்பிட ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இது புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவு.

பழங்கள்

தர்பூசணி மற்றும் முலாம்பழத்தில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. அதேபோல் அதன் விதைகளில் புரதம், தாதுக்கள், இரும்பு சத்து, ஃபோலேட், மக்னீஷியம் போன்ற சத்துக்கள் உள்ளது. அதனால் இந்த பழங்களை சாப்பிடும்போது, விதைகளை நீக்காமல் அப்படியே சாப்பிடுங்கள். சியா விதை மற்றும் பூசணிக்காய் விதைகளையும் அவ்வப்போது சேர்த்து கொள்ளலாம்.

பருப்புகள்
பருப்பு வகைகளில் புரதம் அதிகம் உள்ளது. தினசரி உணவில் ஏதேனும் பருப்புகளை சேர்த்து கொள்வதால் உடலுக்கு தேவையான புரதம் கிடைத்துவிடுகிறது.