குழந்தைகள் நன்றாக வளர எந்தெந்த உணவுகளை கொடுக்கலாம்?

குழந்தைகளுக்கு சிறு வயது முதலே நாம் கொடுக்கும் உணவில் அதிக கவனம் செலுத்தினால் உடல் வளர்ச்சியில் எந்த வித பாதிப்புகளும் உண்டாகாது. ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு அவசியம் வழங்க வேண்டும். உடல் வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டுமென்றால் எந்தெந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதை இனி அறிந்து கொள்ளலாம்.

முட்டை
புரதசத்து அதிகம் கொண்ட உணவுகளில் முட்டை முதல் இடத்தில் உள்ளது. குழந்தைகளின் உணவில் முட்டை மிக முக்கிய உணவாகும். இவை உடல் வளர்ச்சிக்கு மிக முக்கியமாக உதவும். கூடவே செல்களின் வளர்ச்சியும் அதிகரிக்க உதவும். பொரித்த முட்டையை காட்டிலும் வேக வைத்த முட்டை தான் உடலுக்கு அதிக ஆரோக்கியத்தை தரும்.

முழு தானியங்கள்
பருப்பு வகைகள், முழு தானியங்கள் போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு அதிக அளவில் தர வேண்டும். இதனால் அவர்களின் மெட்டபாலிசன் சீராக வேலை செய்யும். மேலும், உடல் வளர்ச்சியை அதிகரிக்க முழு தானியங்கள் பெரும்பாலும் உதவும். அன்றாட உணவில் இதன் பங்கு இன்றியமையாததாகும்.

பால்
குழந்தைகளின் வளர்ச்சி பாலில் அதிகமாகவே உள்ளது. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பால் சிறந்த உணவாகும். அத்துடன் இது உடல் வளர்ச்சிக்கும் நன்கு உதவும். கால்சியம், வைட்டமின் டி, புரதசத்து போன்றவை இதில் நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு அவசியம் இதனை தினமும் கொடுக்க வேண்டும்.

சிக்கன்
பிராய்லர் கோழிகளை காட்டிலும் நாட்டு கோழிகளை குழந்தைகளின் உணவில் சேர்த்து கொள்ளலாம். இது அவர்களின் உடல் வளர்ச்சிக்கு சிறப்பாக உதவும். காரணம் இவற்றில் உள்ள அதிக படியான புரதம் தான். வாரத்திற்கு 1 முறையாவது இதனை குழந்தைகளின் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

சோயா பீன்ஸ்
ஆரோக்கியமான உணவுகளில் சோயா பீன்சும் ஒன்று. சிக்கன், முட்டை பிடிக்காத குழந்தைகளுக்கு இதனை பரிமாறலாம். இவற்றில் புரதசத்து அதிகம் உள்ளது.

காய்கறிகள்
குழந்தைகளின் உணவில் இரும்புசத்து சத்து, மெக்னீசியம், வைட்டமின் பி, ஏ, கே போன்றவை அதிக அளவில் உள்ள காய்கறிகளை சேர்த்து கொள்வது நல்லது. முக்கியமாக கேரட், பீட்ரூட், பீன்ஸ், ப்ரோக்கோலி, கீரை வகைகள் ஆகியவற்றை அதிக அளவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

பழங்கள்
பொதுவாகவே குழந்தைகளுக்கு அந்தந்த பருவ நிலைகளில் கிடைக்கும் உணவுகளை சாப்பிட கொடுத்தாலே உடலின் வளர்ச்சி நன்றாக இருக்கும். மேலும், இது போன்ற பருவ நிலை பழங்கள் எதிர்ப்பு சக்தி குறைபாட்டை குறைக்கும்.

குழந்தைகளின் உடலில் சீரான வளர்ச்சி இல்லையென்றால் அது அவர்களின் எதிர் காலத்தையே பாதித்து விடும். எனவே, குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவை ஒரு முறைக்கு பல முறை சரி பார்த்து விட்டு வழங்குவது நல்லது. மேலும், கடைகளில் விற்கும் கண்ட உணவுகளை குழந்தைகளுக்கு தருவதை தவிர்க்கவும்.