தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 86 ஆயிரத்து 397 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 306 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 708 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 383 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,64,744 ஆக உள்ளது. மருத்துவமனையில் தற்போது 11,043 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-