சென்னையில் கொரோனாவுக்கு 11,654 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்

தமிழகத்தில் கொரோனா தாக்குதல் அதிகரித்து வருகிறது. இருப்பினும் தற்போது 18 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று புதிதாக 5 ஆயிரத்து 994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 96 ஆயிரத்து 901 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் நேற்று புதிதாக 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா உறுதியான 1,09,117 பேரில் 11,654 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பால் 2,302 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 95,161 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். சென்னையில் ஒரேநாளில் 12,792 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 58.98% பேர் ஆண்கள், 41.02% பேர் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று காலை நிலவரப்படி மண்டல வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் விபரம்:-
அம்பத்தூர் - 1,506
கோடம்பாக்கம் - 1,417
அண்ணாநகர் - 1,273
திரு.வி.க.நகர் - 805
தண்டையார்பேட்டை - 614
தேனாம்பேட்டை - 860
வளசரவாக்கம் - 779
திருவொற்றியூர் - 372
மணலி - 85
மாதவரம் - 452
ராயபுரம் - 802
ஆலந்தூர் - 532
அடையாறு - 923
பெருங்குடி - 465
அம்பத்தூர் - 1,506
சோழிங்கநல்லூர் - 464