தூத்துக்குடியில் இருந்து தஞ்சைக்கு வந்த 1250 டன் உரம்

தஞ்சாவூர்: தூத்துக்குடியில் இருந்து தஞ்சைக்கு 1250 டன் உரம் சரக்கு ரயில் வந்தடைந்தது.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அதன்படி குறிப்பிட்ட தேதியில் மேட்டூர் அணை திறந்து விடப்பட்டது.

தற்போது தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும்.

இந்த நிலையில் நேற்று தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயிலில் 1250 டன் காம்ப்ளக்ஸ் உரம் தஞ்சைக்கு வந்து இறங்கியது. பின்னர் உர மூட்டைகள் லாரிகள் ஏற்றப்பட்டு கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.