10 ஆண்டுகளில் 140 பேர் பாலியல் வன்முறை; இளம்பெண் புகாரால் அதிர்ந்து போயுள்ள தெலுங்கானா

இளம் பெண் ஒருவர் கொடுத்த புகார் தெலுங்கானா மாநிலத்தையே அதிர வைத்துள்ளனர். புகாரை படித்து பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டனர். காரணம் இதுதான்.

தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள செட்டி பள்ளியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண் ரம்யா. கடந்த 2009ஆம் ஆண்டு கொண்டா ரெட்டி ரமேஷ் என்பவருக்கும் ரம்யாவிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. சில நாட்களிலேயே ராமேஷின் தந்தை, சகோதரர், சகோதரி, தாய் ஆகியோர் ரம்யாவிற்கு பல்வேறு சித்திரவதைகளை செய்துள்ளனர். உச்சகட்டமாக கணவர் ரமேஷின் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் சிலர் ரம்யாவை பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளனர்.

இதற்கிடையே கடந்த 2010ஆம் ஆண்டு ரம்யாவிற்கும் ரமேஷுற்கும் இடையே விவாகரத்து ஆகியுள்ளது. ஆனால் அதன் பிறகும் ரம்யாவின் வாழ்க்கையில் பல்வேறு கொடூர சம்பவங்கள் நடந்துள்ளன. விவாரகத்து ஆன பின் கல்வியை தொடர்வதற்காக மீண்டும் ரம்யா கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது சிலருடன் ரம்யாவிற்கு ஏற்பட்ட பழக்கம், மீண்டும் அவரது வாழ்க்கையை சின்னாபின்னமாக்கி உள்ளது.

இதுகுறித்து ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் ரம்யா அளித்த புகாரில் இடம் பெற்றவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. குறிப்பிட்ட மாணவர் அமைப்பைச் சேர்ந்த சுமன், ஆஞ்சநேயலு, பாலு, ஜிம் உரிமையாளர் ஸ்ரீநிவாஸ், சென்னையை சேர்ந்த சதீஷ், வழக்கறிஞர்கள் வெங்கடேஷ், முகேஷ், தெலுங்கானா மாநில முதல்வரின் மகள் கவிதாவின் முன்னாள் உதவியாளர் சந்தோஷ் ராவ், பெங்களூரை சேர்ந்த ஸ்ரீநாத் ஆகியோர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளார் ரம்யா.

இவர்களில் சிலர் ஒரு அறையில் தன்னை அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கொலை செய்து விடுவதாகக் கூறி தன்னை நிர்வாண படங்கள் எடுத்ததாகவும் கூறி அதிர வைக்கிறார். மேலும் தன்னை நிர்வாணமாக நிற்க வைத்து செல்பி வீடியோ எடுக்க வைத்தனர், அதனை தனது நண்பர்களுக்கும் அனுப்பியதோடு அவர்களையும் வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ய வைத்தனர் என்றும் தனது புகாரில் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் ரம்யா.

கடந்த 10 ஆண்டுகளில் 140க்கும் மேற்பட்டோர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தனர் என்று ரம்யா அளித்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாலியல் வன்கொடுமையால் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு இன்னல்களை அனுபவித்ததாகக் கூறும் இளம்பெண் காவல் நிலையத்தின் படிக்கட்டுகளில் ஏறியுள்ளது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது