சென்னையில் கொரோனாவுக்கு 14,923 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக முழு விபரம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்து 907 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 2,315 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 83,377 ஆக உள்ளது. 14,923 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை மொத்தம் 1395 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் - 2,099 பேர்
அண்ணா நகர் - 1,609
தேனாம்பேட்டை - 1,441
தண்டையார்பேட்டை - 816
ராயபுரம் - 1,146
அடையாறு - 1,002
திரு.வி.க. நகர் - 1,042
வளசரவாக்கம் - 720
அம்பத்தூர் - 893
திருவொற்றியூர் - 527
மாதவரம் - 386
ஆலந்தூர் - 449
பெருங்குடி - 354
சோழிங்கநல்லூர் - 344
மணலி - 205