சென்னையில் கொரோனாவுக்கு இன்று 19 பேர் உயிரிழப்பு

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தாக்குதல் அதிகரித்து வருகிறது. இருப்பினும் தற்போது 18 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று புதிதாக 5 ஆயிரத்து 994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 96 ஆயிரத்து 901 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் நேற்று புதிதாக 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா உறுதியான 1,09,117 பேரில் 11,654 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 95,161 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். சென்னையில் ஒரேநாளில் 12,792 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பால் 2,302 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 10 பேரும், ஓமந்தூரார் மருத்துவமனையில் 2 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 2 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.